அரசு சட்டக் கல்லூரிகளில் நடத்தப்படும் ஐந்தாண்டு பி.ஏ.,பி.எல். சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது.
சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழகத்தில் உள்ள 6 சட்டக் கல்லூரிகளில் நடத்தப்படும் பி.எல். மற்றும் ஐந்தாண்டு பி.ஏ.,பி.எல். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
இதில் அரசு கல்லூரிகளில் நடத்தப்படும் பி.ஏ.,பி.எல். படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது.
ஜூலை 15, 16-ஆம் தேதிகளில் பொதுப் பிரிவினருக்கும், 17-ஆம் தேதி எஸ்.சி. மற்றும் எஸ்.சி.ஏ. பிரிவினருக்கும், 18-ஆம் தேதி எம்.பி.சி. பிரிவினருக்கும், 19-ல் பி.சி. பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இந்தப் பிரிவில் மொத்தமுள்ள 1,052 இடங்களுக்கு நடத்தப்படும் கலந்தாய்வுக்கு மொத்தம் 4,400 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவற்றில் 280 விண்ணப்பங்கள் தகுதியில்லாதவையாக நிராகரிக்கப்பட்டுள்ளன.
சட்டப் பல்கலைக்கழக ஆற்றல்சார் பள்ளியில் நடத்தப்படும் ஐந்தாண்டு பி.ஏ.,பி.எல். ஹானர்ஸ், பி.காம்.,பி.எல். ஹானர்ஸ் படிப்புகளுக்கு இரண்டு கட்ட கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. இப்போது பி.ஏ.,பி.எல். ஹானர்ஸ் படிப்பில் 30 இடங்களும், பி.காம்.,பி.எல். படிப்பில் 5 இடங்களும் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட உள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

