சென்னை செம்பரம்பாக்கம் அருகே 11-ஆவது மாடியில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
செம்பரம்பாக்கத்தில் ஒரு தனியார் நிறுவனம் சார்பில் 18 மாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானப் பணியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கட்டடத்தின் 11-ஆவது மாடியில் கட்டட சாரம் கட்டும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென அந்த சாரம் சரிந்து விழுந்தது. இதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளி நவீன் கொண்ட்ரா (23), 11-ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து நசரேத்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

