தமிழ் நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் பதிவாளராக ஜி.சந்திரபாபு செயல்படுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக டாக்டர் ஆர்.ஞானசம்பந்தம் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டு இருப்பதாவது: தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் பதிவாளராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜி.சந்திரபாபு நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தில் பல்வேறு விதிமுறை மீறல்கள் நடைபெற்றுள்ளன. இந்தப் பணி நியமனம் தொடர்பான பல்வேறு உண்மைகளை மறைத்து கவுன்சிலின் தலைவர் ரகசியமான முறையில் சந்திரபாபுவை பதிவாளராக நியமித்துள்ளார். விதிகளின்படி 60 வயதுக்குப் பிறகு அரசு ஊழியர்கள் பணியில் நீடிக்க முடியாது. ஆனால் சந்திரபாபு 60 வயதில் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்தப் பணி நியமனத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளிப்பது அவசியம். அவ்வாறு ஒப்புதல் அளித்த பிறகே பதிவாளர் தனது பணியைச் செய்ய முடியும். ஆனால் சந்திரபாபு பதிவாளராக நியமிக்கப்பட்டதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில், அவர் பதிவாளருக்கான பணிகளை செய்து வருகிறார். ஆகவே, அவரது பணி நியமனத்தை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியுள்ளார். இந்த மனு மீது நீதிபதி டி.ஹரிபரந்தாமன் விசாரணை மேற்கொண்டார். அப்போது சந்திரபாபுவின் பணி நியமனத்துக்கு இதுவரை மாநில அரசு ஒப்புதல் தரவில்லை என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனையடுத்து தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவக் கவுன்சில் பதிவாளராக சந்திரபாபு செயல்படுவதற்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

