சென்னைக்கு வந்த விமானத்தில் ரூ.2.5 கோடி தங்கம் கடத்தி வரப்பட்டது. இது தொடர்பாக 5 பேரை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
கொழும்பில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கொழும்பில் இருந்து சென்னை வரும் விமானத்தை கண்காணித்தனர்,
மத்திய வருவாய் புலனாய்வுப் அதிகாரிகள் சோதனை செய்வதை அறிந்த கடத்தல் கும்பல் தங்கள் திட்டத்தை மாற்றி கொழும்பில் இருந்து தில்லி சென்றனர். பின்னர் தில்லியில் இருந்து விமானம் மூலம் 5 பேர் கொண்ட கும்பல் சென்னை வந்தனர்.
இவர்கள் மீது மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. அவர்கள் கொண்டுவந்த சூட்கேûஸ சோதனை செய்தபோது, அதில் 10 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.2.5 கோடி.
இதையடுத்து தங்கக் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த ஜெய்கேந்திரன், முகமது இஸ்மாயில், நிஷார், முகமது சையது, தில்லியைச் சேர்ந்த நீனாவர்மா ஆகிய 5 பேரை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

