சென்னை அய்யப்பன்தாங்கலில் அடகு கடை மூலம் பொதுமக்களின் நகையை மோசடி செய்த உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
அய்யப்பன்தாங்கல் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பத்மநாபன் மனைவி திலகவதி (55). இவர் அய்யப்பன்தாங்கல் டிரங்க் சாலையில் கடை வைத்திருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த போரோராம் என்பவரிடம் 96 கிராம் தங்க நகையை அடகு வைத்து ரூ.30 ஆயிரம் கடன்
வாங்கினாராம்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு பின்னர், கடன் வாங்கிய பணத்தை செலுத்தி அடகு வைத்த நகையைத் திருப்பி வாங்குவதற்காக திலகவதி, போரோராமின் கடைக்குச் சென்றார். அப்போது கடை பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதேபோல போரோராமிடம் நகையை அடகு வைத்தவர்கள், கடை பூட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து அவர்கள் சென்னை பெருநகர காவல்துறையின் குற்றப்பிரிவில் புகார் செய்தனர். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, போரோராமை தேடி வந்தனர்.
இந்நிலையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நின்று கொண்டிருந்த போரோராமை போலீஸார் கைது செய்தனர். இவர் மீது திருட்டு, மோசடி வழக்குகள் உள்ளன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

