சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சென்னையில் ரூ. 50 லட்சம் திருட்டு சி.டி.க்கள் பறிமுதல்: 6 பேர் கைது

சென்னை பாரிமுனையில் திருட்டு சி.டி.க்கள் தயாரித்த 6 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

Updated On :2 ஜூன் 2013, 8:54 am

சென்னை பாரிமுனையில் திருட்டு சி.டி.க்கள் தயாரித்த 6 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

இது குறித்து போலீஸார் வெளியிட்ட செய்தி:

சென்னை பாரிமுனை மலையபெருமாள் தெருவில் உள்ள ஒரு கடையில் போலீஸார் சனிக்கிழமை சோதனை நடத்தினர். அந்தக் கடையின் முகப்பில் வாழை இலைக் கடை இருந்தது. வெளியில் இருந்து பார்க்கும்போது அது வாழை இலைக் கடை போன்றுதான் தெரிந்தது.

இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் உள்ளே சென்று சோதனை செய்தபோது ஏராளமான ஆபாச சி.டி.க்கள் மற்றும் புதிய படங்களின் திருட்டு சி.டி.க்கள் இருப்பதைப் போலீஸார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, அந்த சி.டி.க்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சி.டி. தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கணினிகள், இயந்திரங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக சிவகுமார் (36), மாரிமுத்து, கார்த்திக் (31), சந்தோஷ் (29), தமீமுன் அன்சாரி (26), கட்டடத்தின் உரிமையாளர் தரணி (54) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். பறிமுதல் செய்த சி.டி.க்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 50 லட்சம் ஆகும்.