சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள் பாதுகாவலர் நியமனம் பெற விண்ணப்பிக்கலாம்

மனவளர்ச்சிக்குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாவலர் நியமனம் செய்ய விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று

Updated On :22 மே 2013, 9:56 am

மனவளர்ச்சிக்குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாவலர் நியமனம் செய்ய விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தேசிய அறக்கட்டளையின் மூலம், 18 வயதுக்கு மேற்பட்ட மனம் வளர்ச்சிக்குன்றியோர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனத்தால் பாதிக்கப்பட்டோர் மற்றும் புற உலகச் சிந்தனையற்றோர் ஆகியோருக்கு பாதுகாவலர் நியமனம் கோரி விண்ணப்பிக்கப்பட்ட 25 நபர்களில் 18 நபர்களுக்கு செவ்வாய்க்கிழமை பாதுகாவலர் நியமனம் வழங்கப்பட்டது.

 மேலும், இதுவரை பாதுகாவலர் நியமனம் கோரி விண்ணப்பிக்காதவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் செயல்படும் உள்ளூர் குழுவிற்கு விண்ணப்பிப்பதற்கான விபரங்களைப் பெற சென்னை தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வாளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத் திறானாளிகள் அலுவலகத்தை நேரிலோ அல்லது 044- 2431 5758 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தையல் இயந்திரம்: மாற்றுத் திறனாளிகள் மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம் பெறுவதற்கான நேர்முகத் தேர்வு மே 30-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதுவரை தையல் இயந்திரம் பெறாத காதுகேளாத, வாய்ப்பேசாத மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, கல்வித்தகுதி, வயது வரம்பு, வருமான வரம்பு மற்றும் தையல் தெரியும் என்ற அரசு அல்லது தனியார் நிறுவனச் சான்று ஆகியவைகளை நேர்முகத் தேர்வுக்கு கொண்டு வர வேண்டும் என்று மற்றொரு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.