சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சிவந்தி ஆதித்தனுக்கு இன்று புகழஞ்சலி கூட்டம்

மறைந்த "தினத்தந்தி' அதிபர் பா. சிவந்தி ஆதித்தனுக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள

Updated On :22 மே 2013, 10:00 am

மறைந்த "தினத்தந்தி' அதிபர் பா. சிவந்தி ஆதித்தனுக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் தலைமையேற்று, சிவந்தி ஆதித்தனின் உருவப் படத்தைத் திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில், மூத்த பத்திரிகையாளர்கள் அ.மா.சாமி, ஜ. சண்முகநாதன், நாத்திகம் எம்.பாலன், "தினகரன்' முதன்மை ஆசிரியர் வி. கதிர்வேல், "புதிய தலைமுறை' ஆசிரியர் மாலன் உள்ளிட்ட பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு சிவந்தி ஆதித்தனுக்கு புகழஞ்சலி செலுத்துகின்றனர்.