சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பேட்டரி கடைகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் பொருள்கள் எரிந்து நாசமாயின.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் வாகன பேட்டரி விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடைகள் உள்ளன.
மேலும் இந்த வளாகத்தில் பிரபல தனியார் நிறுவனத்தின் அலுவலகமும் இருந்தது.
இந்தக் கடைகளை அதன் ஊழியர்கள் வெள்ளிக்கிழமை இரவு பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் அந்தக் கடைகளில் ஒன்றில் ஏற்பட்ட தீ, மற்ற கடைகளுக்கும் பரவியுள்ளது.
இது குறித்து தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, எழும்பூர், தேனாம்பேட்டை, வேப்பேரி, அசோக்நகர், சைதாப்பேட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தலா ஒரு தீயணைப்பு வாகனமும், திருவல்லிக்கேணி நிலையத்தில் இருந்து 2 வாகனங்களும் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
சுமார் 3 மணிநேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர். முதல்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாயின.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

