காணாமல் போன தனது கணவரை மீட்டுத் தரக்கோரி உறவினர் வீடு முன்பு இளம்பெண் தர்னா செய்தார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கணவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் தனலட்சுமி (30). இவர் பாரிமுனையில் ஜெராக்ஸ் கடை வைத்திருந்தபோது, தூத்துக்குடியை சேர்ந்த செல்வகுமார் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாம். இதனையடுத்து இருவரும் திருமணம் செய்தனர். போலீஸ் தலையிட்டு இந்த திருமணத்தை நடத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது.
திருமணமான அதே நாளில் தூத்துக்குடியில் இருக்கும் தனது தாயாருக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி சென்ற செல்வகுமார் திரும்பி வரவில்லையாம். இதுகுறித்து தனலட்சுமி காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், முகப்பேர் பகுதியில் உள்ள செல்வகுமாரின் சகோதரர் வீடு முன்பு கணவரை மீட்டுத் தரக்கோரி வெள்ளிக்கிழமை இரவு முதல் தனலட்சுமி தர்னா செய்தார். இதனையடுத்து செல்வகுமாரை போலீஸார் தேடினர். அவர் சென்னை புறநகர் பகுதியில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சனிக்கிழமை மாலை செல்வகுமார் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செல்வகுமார் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தனலட்சுமி தர்னாவை முடித்து கொண்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

