சென்னையில் போலீஸ்காரர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்தவர் பிலிப் (33). இவர் திருவல்லிக்கேணி காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
அவருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவுப் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் காலை 8 மணிக்கே வீட்டில் இருந்து புறப்பட்டு விட்டார். பின்னர் பகல் 12 மணியளவில் அவரது மனைவி ஜெயந்திக்கு (28) போன் செய்த பிலிப், தான் வீட்டுக்கு வரமாட்டேன் என்றும் தற்கொலை செய்துக் கொள்ளப் போகிறேன் என்றும் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து செல்போனை அணைத்து விட்டாராம்.
பின்னர் பிற்பகல் 2 மணியளவில் மெரினா கடற்கரையில் கடலை நோக்கி சென்ற அவர், நீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விசாரித்ததில், கணவன் மனைவிக்கு இடையில் பெரிதாக பிரச்சனை எதுவும் இல்லை என்றும், காலையில் கிளம்பும் போது சிறிய தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
பிலிபின் உடலை மீட்ட போலீஸார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பிலிப்-ஜெயந்திக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

