சென்னை சென்ட்ரலில் ரிக்ஷாகாரரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு தப்பியோடிய பெண் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையைச் சேர்ந்தவர் முத்து (50). இவர் அங்கு சைக்கிள் ரிக்ஷா ஓட்டி வருகிறார். சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே முத்து வியாழக்கிழமை ரிக்ஷாவுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையுடன் பர்தா அணிந்த ஒரு பெண் அங்கு வந்தார். அவர் முத்துவிடம், தனது தந்தை சாலையின் மற்றொரு முனையில் நடக்க முடியாமல் நிற்கிறார். குழந்தையை சிறிது நேரம் வைத்திருந்தால் தந்தையை அங்கிருந்து அழைத்து வந்துவிடுவேன் என்று கூறினார். அவரது பேச்சை நம்பிய முத்து, அந்த குழந்தையை வாங்கியுள்ளார். உடனே அந்த பெண் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார்.
வெகுநேரமாகியும் அந்தப் பெண் திரும்பி வரவில்லை. குழந்தையை கொடுத்துவிட்டு தப்பிக்கவே அந்தப் பெண் அவ்வாறு நாடகமாடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் பூக்கடை காவல் நிலையத்தில் குழந்தையை ஒப்படைத்தார். குழந்தையை பெற்றுக் கொண்ட போலீஸார், அங்குள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

