இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) சார்பில் தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா கண்காட்சி மற்றும் சர்வதேசக் கருத்தரங்கம் ஏப்ரல் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் 2 நாள்களுக்கு நடைபெறும் மருத்துவ சுற்றுலா கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் மொரீசியஸ், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, லண்டன், தைவான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி குறித்து சி.ஐ.ஐ மருத்துவக் குழுவின் தலைவர் டாக்டர் சந்திரகுமார் கூறியது:- சர்வதேசத் தரத்திலான மருத்துவ சேவையை வழங்குவதில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது. அதி நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைகள், தகுதி வாய்ந்த மருத்துவர்கள், நவீன தொழில்நுட்பத்திலான மருத்துவ சேவைகள் என நம் மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் தரம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளிலிருந்து மருத்துவ சிகிச்சை பெற தமிழகத்துக்கு வரு
கின்றனர்.
உலக அளவில் தமிழகத்தை ஒரு மருத்துவ மையமாக தரம் உயர்த்தும் முயற்சியாக தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் உறுதுணையோடு இந்திய தொழிலகக் கூட்டமைப்பு சார்பில் மருத்துவ சுற்றுலா கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற
உள்ளது.
மருத்துவத் துறையில் சர்வதேச அனுபவங்கள் மற்றும் சிறந்த சேவைகள், மருத்துவ சுற்றுலாவினை ஊக்குவித்தல், தமிழகத்தை மருத்துவ சுற்றுலா மையமாக மேம்படுத்துதல் என்ற தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவ நிறுவனங்கள், சுற்றுலா மேம்பாட்டு நிறுவனங்கள், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள், ஹோட்டல்கள், தகுதி வாய்ந்த மருத்துவமனைகளின் தகவல்கள் கண்காட்சியில் இடம்பெறும் என்று டாக்டர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

