சென்னை புதுப்பேட்டையில் துப்பாக்கி வெடித்து எஸ்.ஐ. காயமடைந்த வழக்கில் கவனக்குறைவாக இருந்ததாக மற்றொரு சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
கடலூரைச் சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன். இவர் சென்னையில் நடைபெற உள்ள காவலர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக இங்கு வந்துள்ளார். சென்னைப் பெருநகர காவல்துறையில் சிறப்பு அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் தனது நண்பர் ஆனந்தகுமாருடன், புதுப்பேட்டையில் ஒரு தனியார் விடுதியில் அவர் தங்கியிருந்தார்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு அந்த அறையில் துப்பாக்கியால் சுடும் சத்தமும், அதைத்தொடர்ந்து இளமாறனின் அலறல் சத்தமும் கேட்டுள்ளது. விடுதி ஊழியர்கள் அந்த அறைக்கு சென்று பார்த்தனர்.
அங்கு இடதுகாலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அலறிக் கொண்டிருந்த இளமாறனை அவர்கள் மீட்டு, ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனந்தகுமார் துப்பாக்கியை கழற்றி மேஜையில் வைக்கும்போது, துப்பாக்கியின் டிரிக்கரில் தவறுதலாக கைப்பட்டு அதில் இருந்த குண்டு வெளியேறி இளமாறன் மீது பாய்ந்து விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இது குறித்து கிழக்கு மண்டல இணை ஆணையர் கே.சங்கர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமாரிடம் விசாரணை செய்தார். சம்பவ இடத்திலும் விசாரணை செய்தார். இந்த விசாரணைக்கு பின்னர் எழும்பூர் போலீஸார் ஆனந்தகுமார் மீது விபத்தை ஏற்படுத்தும் வகையில் கவனக்குறைவாக செயல்பட்டதாக வழக்குப் பதிவு செய்தனர்
கவனக்குறைவாக செயல்பட்ட ஆனந்தகுமார் மீது விரைவில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

