சென்னை கிண்டியில் பூனையை கொன்றதாக நரிக்குறவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது:
கிண்டி மடுவங்கரை பாலத்தின் கீழ் வசிப்பவர் நாகப்பன் (65). இவர் கன்னிகாபுரம் பகுதியில் வீடுகளில் வளர்க்கும் பூனைகளைப் பிடித்து கொன்று இறைச்சியை விற்பதாக ப்ளூ கிராஸ் அமைப்பினருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் வந்தது. அந்த தகவலின் அடிப்படையில் நாகப்பன் வசிக்கும் இடத்துக்கு ப்ளூ கிராஸ் அமைப்பினர் சென்றனர்.
அப்போது அங்கு பூனை அடித்துக் கொல்லப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ப்ளூ கிராஸ் அமைப்பினர் கிண்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த கிண்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பூனை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீஸார் மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நாகப்பனை கைது செய்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை செய்ததில் அவர் பூனை இறைச்சியை ஹோட்டலுக்கு பணத்துக்காக விற்பது தெரியவந்தது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

