சென்னை புழல் அருகே திருமணமான 20-வது நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
கொளத்தூர் புதிய லட்சுமிபுரம் வ.உ.சி.தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன்
முருகனுக்கும் (32), கொடுங்கையூர் சின்னாண்டிமடம் திருவள்ளூவர் சாலையில் வசிக்கும் பாபு-கஸ்தூரி தம்பதியரின் மகள் உஷாவுக்கும் (27) மார்ச் மாதம் 13ம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது பெண் வீட்டார் உஷாவுக்கு 12 பவுன் நகை வரதட்சிணையாக கொடுத்தனர். மாப்பிள்ளை முருகனுக்கு 2 பவுன் தங்கநகை போட்டுள்ளனர்.
திருமணம் முடிந்த பின்னர் முருகன் குடும்பத்தினர், தங்களுக்கு மேலும் வரதட்சிணை வேண்டும் என்று உஷாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து உஷா வீட்டினர் மேலும் 3.5 பவுன் தங்க நகையை முருகனுக்கு வரதட்சிணையாகக் கொடுத்தனர்.
இதன் பின்னரும் முருகன் குடும்பத்தினர் வரதட்சிணை கேட்டு உஷாவை கொடுமைப்படுத்தினராம். உஷா, ஞாயிற்றுக்கிழமை தனது பெற்றோருக்கு ஃபோன் செய்து இங்கு கொடுமை தாங்க இயலவில்லை என்றும், தன்னை அங்கே அழைத்து செல்லும்படியும் கூறினாராம்.
இந்நிலையில் அன்று மாலை வீட்டில் உஷா தூக்கிட்டுக் கொண்டார்.
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே உஷா இறந்தார்.
இது குறித்து புழல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

