சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தண்ணீர் வாளியில் விழுந்த குழந்தை சாவு

சென்னை பள்ளிக்கரணையில் தண்ணீர் வாளியில் விழுந்த 18 மாத குழந்தை உயிரிழந்தது.

Updated On :2 ஏப்ரல் 2013, 10:16 am

சென்னை பள்ளிக்கரணையில் தண்ணீர் வாளியில் விழுந்த 18 மாத குழந்தை உயிரிழந்தது.

இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது: சித்தாலப்பாக்கம் அருகே உள்ள இந்திரா நகரைச் சேர்ந்த ரஞ்சித்- பவானி தம்பதியின் மகள் 18 மாத குழந்தை சோபியா. இவள் சிறிது மன வளர்ச்சி பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சோபியா திங்கள்கிழமை வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் வாளியில் விழுந்ததாகத் தெரிகிறது.

குழந்தையை உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே குழந்தை உயிரிழந்தது. இது குறித்து பள்ளிக்கரணை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.