திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கம் சிறுசேரியில் வசித்து வரும் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 100 சவரன் நகைகளை, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கம் அருகே உள்ளது சிறுசேரி கிராமம். இங்கு, செங்கணி அம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் ராஜா (45). ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்த ராஜா, சிறுநீர் கழிப்பதற்காக எழுந்துள்ளார்.
அப்போது, அவரது மனைவி காயத்ரி, மகன் இன்பரசு, மகள் சாந்தினி ஆகியோர் படுத்திருந்த அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டும், துணிகள் சிதறியும் கிடந்தது கண்டு ராஜா அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், மற்றொரு படுக்கை அறையை பார்த்தபோது அங்கு பீரோவில் இருந்த 100 சவரன் நகைகளும், ரூ.10 ஆயிரம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மர்ம நபர்கள் நகைகளை எடுத்துக்கொண்டு, காலி பெட்டிகளை வீட்டின் பின்புறம் ஆங்காங்கே வீசிச் சென்றுள்ளனர்.
புகாரின் பேரில், கேளம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள், தடயங்களை பதிவு செய்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

