சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தாம்பரத்தில் தெருநாய் தொல்லை தடுக்க நடவடிக்கை

தாம்பரத்தில் தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தாம்பரம் நகராட்சி தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

Updated On :12 மார்ச் 2013, 8:38 am

தாம்பரத்தில் தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தாம்பரம் நகராட்சி தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

கூடுவாஞ்சேரி வள்ளி நகரில் வசித்து வரும் சரவணன் மகள் தனப்ரியா என்ற 4 வயது சிறுமியை கடந்த வெள்ளிக்கிழமை தெருநாய்கள் கடித்துக் குதறியது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிறுமி தனப்ரியாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிறப்பு மருத்துவச் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தாம்பரம் நகர்மன்றத் தலைவர் கரிகாலன் பேசும்போது, பொதுமக்கள் தங்கள் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை இருந்தால் 24 மணிநேரமும் தொலைபேசி மூலம் 9884900315, 044-22266206 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று கூறினார். உடன், நகராட்சி ஆணையர் எஸ்.சிவசுப்ரமணியன்,பொறியாளர் சீனிவாசன் இருந்தனர்.