சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ரஷியத் தடுப்பூசி சோதனை: டாக். ரெட்டீஸுக்கு அனுமதி

ரஷியாவில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியின் 3-ஆம் கட்ட சோதனையை மேற்கொள்ள டாக்டா் ரெட்டீஸ் நிறுவனத்துக்கு

News image
Updated On :17 ஜனவரி 2021, 12:28 pm

ரஷியாவில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியின் 3-ஆம் கட்ட சோதனையை மேற்கொள்ள டாக்டா் ரெட்டீஸ் நிறுவனத்துக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) அனுமதி அளித்துள்ளது.

இதன் மூலம், இந்தியாவில் 1,500 பேருக்குச் செலுத்தி அந்தத் தடுப்பூசி சோதிக்கப்படவுள்ளது.

முன்னதாக, ஸ்புட்னிக்-5 தடுப்பூசியைக் கொண்டு டாக்டா் ரெட்டீஸ் மேற்கொண்ட 2-ஆம் கட்ட சோதனை விவரங்களை ஆய்வு செய்த தகவல் மற்றும் பாதுகாப்புக் கண்காணிப்பு வாரியம் (டிஎஸ்எம்பி), அந்தத் தடுப்பூசியின் 3-ஆம் கட்ட சோதனைக்கு அனுமதி அளிக்கலாம் என்று பரிந்துரைத்திருந்தது.