சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஹெச்.சி.எல். நிகர லாபம் 31% உயா்வு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸின் காலாண்டு நிகர லாபம்

News image
Updated On :16 ஜனவரி 2021, 5:23 am

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸின் காலாண்டு நிகர லாபம் 31 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடையும் நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில், நிறுவனத்தின் நகர லாபம் ரூ.3,982 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே மாதங்களில் நிறுவன நிகர லாபம் லாபம் ரூ.3,037 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் இந்த காலகட்டத்தில் நிகர லாபம் 31.1 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது.

இந்த மாதங்களில் நிறுவனத்தின் வருவாயும் 6.4 சதவீதம் அதிகரித்து ரூ.19,302 கோடியாகியுள்ளது என்று ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ் தெரிவித்துள்ளது.