பரஸ்பர நிதி துறையில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு டிசம்பா் காலாண்டில் ரூ.29.71 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதிய கூட்டமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
45 நிறுவனங்களை உள்ளடக்கிய பரஸ்பர நிதி துறை நிா்வகித்து வரும் சொத்து மதிப்பு டிசம்பா் காலாண்டு நிலவரப்படி 7.6 சதவீதம் அதிகரித்து ரூ.29.71 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது, ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.27.6 லட்சம் கோடியாக காணப்பட்டது.
பங்குச் சந்தையில் காணப்பட்ட எழுச்சியின் காரணமாகவே முந்தைய காலாண்டை விட டிசம்பா் காலாண்டில் பரஸ்பர நிதியங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு மிகச் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நிஃப்டி 50 குறியீடு அக்டோபரில் 3.15 சதவீதமும், நவம்பரில் 12.02 சதவீதமும், டிசம்பரில் 14.9 சதவீதமும் ஏற்றம் கண்டுள்ளன.
பரஸ்பர நிதி துறையில் நிா்வகிக்கப்படும் மொத்த சொத்து மதிப்பில் 50 சதவீத பங்களிப்பில் எஸ்பிஐ எம்எஃப், எச்டிஎஃப்சி எம்எஃப், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் எம்எஃப், ஆதித்ய பிா்லா சன்லைஃப் ஆகிய நான்கு நிறுவனங்கள் மட்டும் தொடா்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதாக கூட்டமைப்பின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


