கடந்த ஜூலை மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனை 30 சதவீதம் சரிந்துள்ளது.
இந்நிறுவனம் கடந்த மாதத்தில் மொத்தம் 51,468 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் ஜூலை மாத விற்பனையான 73,491ஐ விட 29.96 சதவீதம் குறைவு. இந்நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை 58.75 சதவீதமும், வர்த்தக வாகன விற்பனை 14.2 சதவீதமும் குறைந்தது.
மாருதி சுசூகி நிறுவனம் கடந்த மாதத்தில் 83,299 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தின் விற்பனையான 82,234ஐவிட 1.3 சதவீதம் அதிகம். எம்.800, ஆல்டோ, ஏ-ஸ்டார் உள்ளிட்ட சிறிய கார் விற்பனை 15.8 சதவீதம் அதிகரித்துள்ளது. ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஜூலை மாத விற்பனை இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் 4,386 ஆக இருந்த கார் விற்பனை 11,223 ஆகி உள்ளது. ரெனால்ட் கார் விற்பனை 2 மடங்கு அதிகரித்து 3,763 ஆகி உள்ளது. போர்டு இந்தியா கார் விற்பனை 48 சதவீதம் அதிகரித்து 12,338 ஆகி உள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா கார் விற்பனை 10.73 சதவீதமும் (6,503), டொயோட்டா கிர்லோஸ்கர் விற்பனை 10 சதவீதமும் (14,470), மஹிந்திரா அன்ட் மஹிந்திரா விற்பனை 21 சதவீதமும் (37,096) சரிந்துள்ளது. இரு சக்கர வான உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் ஜூலை மாதத்தில் 4,87,545 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இது 4,84,217 ஆக இருந்தது. டிவிஎஸ் 1,53,676 (-4.7%) பைக்குகளையும், யமஹா மோட்டார் இந்தியா 58,151 (57%) பைக்குகளையும் விற்பனை செய்துள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

