ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (ஜூலை 11) பவுனுக்கு ரூ.344 உயர்ந்துள்ளது. சென்னை மார்க்கெட்டில் ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக இந்திய சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்படுகிறது. கடந்த மாதம் 25-ஆம் தேதி சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்து 208-ஆக இருந்தது. அதன் பிறகு சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சரிவு காரணமாக ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவாகவே ஒரு பவுன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் வியாழக்கிழமை சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்ந்தது. இதனால் இந்தியாவிலும் அதன் விலை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்ந்ததன் எதிரொலியாக வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.2,525 உயர்ந்து சென்னை மார்க்கெட்டில் ரூ.42 ஆயிரத்து 665-க்கு விற்கப்பட்டது.
வியாழக்கிழமை
மார்க்கெட் நிலவரம்:
ஒரு கிராம் ரூ.2,515
ஒரு பவுன் ரூ.20,120
ஒரு கிராம்
வெள்ளி ரூ.45.70
ஒரு கிலோ
வெள்ளி ரூ.42,665
புதன்கிழமை
மார்க்கெட் நிலவரம்:
ஒரு கிராம் ரூ.2,472
ஒரு பவுன் ரூ.19,776
ஒரு கிராம்
வெள்ளி ரூ.43
ஒரு கிலோ
வெள்ளி ரூ.40,180
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

