ரூபாயின் மதிப்பில் தொடரும் வீழ்ச்சியை சரி செய்ய மத்திய அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமரின் தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன் புது தில்லியில் தெரிவித்திருக்கிறார்.
ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள கடும் சரிவு செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 58.90 என்ற அளவைத் தொட்டது.
திங்கள்கிழமை ரூபாயின் மதிப்பு 58.16 ஆகக் குறைந்திருந்தது. இது முன்பு எப்போதும் கண்டிராத வீழ்ச்சியாகும். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்துள்ளது. காலையில் அன்னிய செலாவணி சந்தையில் ஒரு அமெரிக்க டாலருக்கு 58.35 ரூபாய் தர வேண்டியிருந்தது. இறக்குமதியாளர்கள், வங்கிகள் அதிக அளவில் டாலர்களை வாங்கினார்கள். பின்னர், அமெரிக்க டாலருக்கு இணையாக ரூபாய்
மதிப்பு 58.90 என்ற வரலாறு காணாத அளவுக்குத் தாழ்ந்தது.
இந்நிலையில், ரூபாயின் மதிப்பை அதிகரிக்கும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமரின் தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன் புது தில்லியில் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியது:
கடந்த சில நாட்களாக நிதி சந்தையில் கடுமையான ஏற்ற-இறக்கங்கள் நிலவி வருகிறது. மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, செபி ஆகியவை இந்த நிலையை கவனமாக ஆராய்ந்து வருகின்றன. அவரவர் நிலையில், நிதி சந்தை சூழலை சரி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுப்பார்கள்.
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் கடன் பத்திரங்களில் செய்துள்ள தங்களது முதலீட்டை பெரும் அளவில் திரும்ப பெற்றுள்ளதால் ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. கடந்த மே மாதம் முதல் தேதியிலிருந்து, ஏறத்தாழ ரூ. 2,670 கோடி மதிப்பிலான கடன் பத்திர முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளன. இறக்குமதி-ஏற்றுமதி விகிதம் பாதகமாக உள்ளதால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்திருக்கிறது.
வரும் நாட்களில் பல்வேறு நிலைகளில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் விதமான சில ஆலோசனைகளை மத்திய அமைச்சரவைக்கு அளிக்க இருக்கிறோம். இது குறுகிய கால அளவில் மட்டும் அல்லாமல், நீண்ட கால அடிப்படையிலும் வளர்ச்சியை உறுதி செய்யும். நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை சரிகட்ட இந்த நடவடிக்கைகள் உதவும் என்றார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

