சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பங்குச் சந்தையில் 298 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 298 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்பட்டது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீட்டெண் 19,143 என்ற அளவில் நிலைத்தது.

Updated On :12 ஜூன் 2013, 6:41 am

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 298 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்பட்டது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீட்டெண் 19,143 என்ற அளவில் நிலைத்தது.

ரூபாயின் மதிப்பில் கடும் சரிவு ஏற்பட்டது பங்குச் சந்தையை பாதித்தது. மேலும் நிலக்கரிச் சுரங்க உரிமம் வழங்கும் முறைகேட்டில் ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் நவீன் ஜிண்டாலை தொடர்புபடுத்தும் விதமாக சிபிஐ முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது அந்நிறுவனத்தின் பங்கு விலையை 24 சதவீத அளவுக்கு சரிய வைத்தது.

சென்செக்ஸில் பட்டியலில் உள்ள 13 துறை பங்குகளும் இழப்பை சந்தித்தன. மே மாத கார் விற்பனை புள்ளிவிவரம் உற்சாகம் அளிக்காததால் ஆட்டோமொபைல் துறை பங்குகள் நஷ்டத்தில் விற்பனையாகின. கடந்த இரண்டு மாத அளவில் மும்பை பங்குச் சந்தையில் இதுவே மிகவும் தாழ்ந்த நிலையாகும்.

கரன்சி சந்தையில் ரூபாயின் மதிப்பு மிகவும் சரிந்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்புக்கே இடமில்லாமல் போய்விட்டது என்று பங்கு வர்த்தகர்கள் கருத்து தெரிவித்தனர்.

தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 29 புள்ளிகள் சரிந்து, வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 5,848 என்ற அளவில் நிலைத்தது.