சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா லாபம் 90 சதவீதம் அதிகரிப்பு

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் நிகர லாபம் கடந்த நிதி ஆண்டில் (2012-13) 90.43 சதவீதம் அதிகரித்திருப்பதாக வங்கியின் சென்னை மண்டல மேலாளர் பி. அக்பர் அலி தெரிவித்தார். வங்கியின் நிதி நிலை அறிக்கையை வெளியிட்டு அவர் கூறியது:-

Updated On :12 மே 2013, 5:28 am

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் நிகர லாபம் கடந்த நிதி ஆண்டில் (2012-13) 90.43 சதவீதம் அதிகரித்திருப்பதாக வங்கியின் சென்னை மண்டல மேலாளர் பி. அக்பர் அலி தெரிவித்தார். வங்கியின் நிதி நிலை அறிக்கையை வெளியிட்டு அவர் கூறியது:-

2012 மார்ச் முதல் 2013 மார்ச் வரை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் மொத்த வணிகம் ரூ. 4 லட்சத்து 2 ஆயிரத்து 272 கோடியாகும். இது முந்தைய ஆண்டைவிட 15.96 சதவீதம் அதிகமாகும். வங்கியின் வைப்புத் தொகை கடந்த நிதியாண்டில் ரூ. 2 லட்சத்து 26 ஆயிரத்து 38 கோடியாகும். இது முந்தைய ஆண்டைவிட 15.22 சதவீதம் அதிகமாகும்.

கடந்த நிதி ஆண்டில் வங்கி ரூ. 1,015 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய நிதி ஆண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ. 533 கோடியாக இருந்தது. பல்வேறு புதிய திட்டங்கள், சலுகைகள் மூலம் வங்கியின் வணிகம் அதிகரித்திருப்பதாக அக்பர் அலி தெரிவித்தார்.