அடுத்த தலைமுறை தொழில்நுட்பமான ஹிட்ஸ் என்பதன் அடிப்படையில் இந்தியாவின் டைரக்ட்-டு-நெட்வொர்க் (டிடிஎன்) டிஜிட்டல் கேபிள் டிவி சேவை நிறுவனமான ஜெயின்ஹிட்ஸ், தொழில் விற்பனை, சந்தையாக்கல் மற்றும் லாஜிஸ்டிக் துறையில் முன்னணியில் உள்ள இன்கிராம் மைக்ரோ-ஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்படி இந்தியா முழுவதும் உள்ள கேபிள் ஆபரேட்டர்களை ஒருங்கிணைக்கும் பணியை ஜெயின்ஹிட்ஸ் நிறுவனத்துக்காக இன்கிராம் நிறுவனம் மேற்கொள்ளும். 60 ஆயிரம் கேபிள் ஆபரேட்டர்களை அணுகி அவர்களை கூட்டாளிகளாக ஆக்கி அவர்கள் தொழில் நடத்துவதற்கு உரிய சூழலை ஏற்படுத்தி லாபம் ஈட்ட வைக்க வேண்டும் என்ற நோக்கில் ஜெயின்ஹிட்ஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது. முதலாண்டில் 2,000 கேபிள் ஆபரேட்டர்களை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் 20 சதவீதம் பிராட்பேண்ட் சந்தைக்கானதாகும், 10 சதவீதம் கிளவ்ட் பிராட்பேண்ட் மற்றும் விளையாட்டு தொடர்புடையதாக இருக்கும் என்று ஜெயின்ஹிட்ஸ் நிறுவன நிர்வாகி ஜெயின் தெரிவித்தார். ஜெயின்ஹிட்ஸ் 1,000 தொலைக்காட்சி சேனல்கள் வரை வழங்கும் திறன் கொண்ட டிஜிட்டல் கேபிள் டிவி ஒருங்கிணைப்பை அளிக்கிறது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

