சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எல்என்வி டெக்னாலஜி நிறுவனம் ஹாங்காங்கைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சினோமா இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
சிமெண்ட் ஆலைகளுக்குத் தேவையான கருவிகள், இயந்திரங்களைத் தயாரித்து அளிப்பதில் எல்என்வி டெக்னாலஜி நிறுவனம் முன்னணியில் உள்ளது. இலங்கை, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்நிறுவனம் கருவிகளைத் தயாரித்து அளிக்கிறது. சர்வதேச அளவில் பிரபலமாக விளங்கும் சினோமா இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இப்போது ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் சென்னையில் வியாழக்கிழமை கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி ரூ. 130 கோடிக்கு 68 சதவீத எல்என்வி டெக்னாலஜி நிறுவன பங்குகளை சினோமா நிறுவனம் வாங்கியுள்ளது. எல்என்வி டெக்னாலஜி நிறுவனத்துக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை சினோமா நிறுவனம் அளிக்கும். இதற்கான ஒப்பந்தத்தில் சினோமா இண்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் வாங் வெய் மற்றும் எல்என்வி டெக்னாலஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி.சி. ராவ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
எல்என்வி டெக்னாலஜி நிறுவனம் இதுவரை 230 சிமெண்ட் ஆலைகளுக்கு கருவிகளைத் தயாரித்து அளித்துள்ளது. சினோமா நிறுவனம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலைகளை சர்வதேச அளவில் நிறுவியுள்ளது. எதிர்காலத்தில் இவ்விரு நிறுவனங்களும் இணைந்து புதிய ஆலைகளுக்கான தொழில்நுட்ப உத்திகளைப் பகிர்ந்து கொண்டு நிறைவேற்றும்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

