சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

டெக்கான் நிறுவனத்தின் உயர் செயல்திறன் கொண்ட பம்ப்

கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டெக்கான் பம்ப்ஸ் நிறுவனம், எக்கி என்ற பெயருடன் உயர்

Updated On :2 ஏப்ரல் 2013, 6:03 am

கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டெக்கான் பம்ப்ஸ் நிறுவனம், எக்கி என்ற பெயருடன் உயர் செயல் திறன் கொண்ட பம்ப்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, டெக்கான் பம்ப்ஸ் நிர்வாக இயக்குநர் பி.ஆறுமுகம், எக்கி புராடக்ட் மேலாளர் கனிஷ்கா ஆறுமுகம் ஆகியோர், கோவையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு டெக்கான் பம்ப்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. இந் நிறுவனத்தின் ஆண்டு விற்று முதல் ரூ. 100 கோடி. அடுத்த 4 ஆண்டுகளுக்குள் இந் நிறுவனம் 5 மடங்கு வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பம்ப் நிறுவனங்கள் ஆண்டுக்கு 15 சதவீத வளர்ச்சியடைந்து வருகின்றன.

டெக்கான் பம்ப் நிறுவனம் சார்பில் எக்கி என்ற பிராண்ட் பெயரில் குறைந்த மின்சக்தியில் அதிகத் திறனுடன் செயல்படும் மோட்டாருடன் கூடிய பம்ப்கள் மற்றும் ஆழ்குழாய் பம்ப்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்றுமதி செய்வதற்காக ஐரோப்பிய நிறுவனத்துடன் விரைவில் பேச்சு நடத்தப்பட உள்ளது.

எக்கி பிராண்ட் பொருள்கள் தயாரிக்க 40 ஆயிரம் சதுர அடிப் பரப்பளவில் ஆலை செயல்படுகிறது. 2-ஆவது ஆலைக்கான கட்டடப் பணிகள் இரண்டு மாதங்களிலும் பிற விரிவாக்கப் பணிகள் அடுத்த 3 மாதங்களிலும் நடைபெற உள்ளன. மாதம் 6000 முதல் 7000 பம்ப்கள் வரை இங்கு உற்பத்தி செய்யப்படும்.

விவசாயப் பயன்பாட்டுக்காகவும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தவும் எக்கி பம்ப்கள் தயாரிக்கப்படுகின்றன. மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளுக்கு இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்று அவர்கள் தெரிவித்தனர்.