மார்ச் மாதத்தில் கார் விற்பனை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஹுண்டாய், டாடா மோட்டர்ஸ், ஜெனரல் மோட்டர்ஸ், ஹோண்டா கார், ஃபோர்டு ஆகிய நிறுவனங்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸýகி தனது விற்பனை விவரங்களை செவ்வாய்க்கிழமை வெளியிடுகிறது.இரண்டாவது இடத்தில் இருக்கும் ஹுண்டாய் நிறுவனத்தின் கார் விற்பனை 13 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மார்ச் மாதம் இந்நிறுவனம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 33,858 ஆகும். டாடா நிறுவனத்தின் பயணிகள் கார் விற்பனை 66 சதவீதம் சரிந்துள்ளது. சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் 36,984 கார்கள் விற்பனை ஆன நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் 12,347 கார்கள் மட்டுமே விற்றுள்ளது.
மஹிந்திரா, டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனங்களின் விற்பனையில் வளர்ச்சி காணப்பட்டுள்ளது. டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள எடியோஸ் கார்கள் வாடிக்கையாளர்கள் இடையே வரவேற்பு பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இரு சக்கர வாகனங்களின் விற்பனையை பொருத்தவரை. ஹோண்டா நிறுவனத்தின் டூவீலர்களின் விற்பனையில் வளர்ச்சி காணப்பட்டது. இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டர்ஸ், சென்னையைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டர்ஸ் ஆகியவற்றின் விற்பனை அளவு லேசாக சரிந்தது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

