மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 91 புள்ளிகள் சரிந்தன.
காலையில் வர்த்தகம் தொடங்கியபோது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டளவான சென்செக்ஸ் லாபகரமாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸில் ஏறக்குறைய 200 புள்ளிகள் உயர்ந்து, 19,082 என்ற அளவைத் தொட்ட போதிலும் வர்த்தகம் முடியுந்தருவாயில் முந்தைய நிலையைவிட 91 புள்ளிகள் சரிந்தது. வியாழக்கிழமை மாலையில் சென்செக்ஸ் குறியீட்டளவு 18,792 என்ற அளவில் நிலைத்தது. கடந்த நான்கு மாதங்களில் இதுவே மிக குறைந்த நிலையாகும்.
கடந்த ஐந்து நாட்களாக பங்குச் சந்தை தொடர்ந்து நஷ்டத்தில் இருந்துவருகிறது. ஐந்து நாட்களில் சென்செக்ஸில் ஒட்டுமொத்தமாக 777 புள்ளிகள் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத் தகுந்தது. வீட்டு வசதி நிறுவனங்கள், மின் துறை, மூலப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், அரசுத் துறை நிறுவனங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், உலோகத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்கு விலை தொடர்ந்து சரிவுற்றது.
எச்.டி.எஃப்.சி.வங்கி, லார்சன் அண்ட் டூப்ரோ, டாடா மோட்டர்ஸ், டாடா பவர், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ், ஐ.டி.சி., பஜாஜ் ஆட்டோ, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஓ.என்.ஜி.சி., மாருதி சுஸýகி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை வீழ்ச்சி அடைந்ததே சென்செக்ஸ் வீழ்ச்சிக்கு பிரதானமான காரணமாக கூறப்பட்டது.
தேசிய பங்குச் சந்தை: தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 35 புள்ளிகள் சரிந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டளவான நிஃப்டி 5,658 புள்ளிகள் என்ற அளவில் நிலைத்தது. கடந்த நான்கு மாதங்களில் நிஃப்டியில் இதுவே மிக குறைந்த அளவாகும்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

