மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய உருக்கு ஆணையத்தின் (செயில்) பங்கு விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
மஹாரத்னா நிறுவனமான செயிலில் 5.82 சதவீத அளவிலான பங்குகளை ஏல முறையில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பங்குக்கான அடிப்படை விலை ரூ. 63 என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கு விற்பனையின் மூலம் ரூ. 1,514 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
மொத்தம் 24.03 கோடி பங்குகள் ஏலத்துக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதி ஆண்டில் விற்பனைக்கு வரும் கடைசி அரசு நிறுவனப் பங்கு இதுதான். பல்வேறு அரசு நிறுவனங்களில் சிறிதளவு பங்கு விற்பனை மூலம் ஒட்டுமொத்தமாக ரூ. 24 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் அதிகபட்சமாக ரூ. 23,800 கோடிதான் திரட்ட இயலும் என கணக்கிடப்பட்டிருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் செயில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.484 கோடியாக இருந்தது. கடந்த ஐந்து நாட்களாக பங்குச் சந்தை நிலவரம் சாதகமாக இல்லாததால் செயில் பங்கு விற்பனை தொடங்கும் நாள் மற்றும் ஏலத்துக்கான அடிப்படை விலை நிர்ணயிப்பதில் அரசுக்கு சற்றே தயக்கம் இருந்துவந்தது. ஆயினும் நிதி ஆண்டு முடியுந்தருவாயில் இருப்பதால் மேலும் பங்கு விற்பனையை தாமதப்படுத்த தேவையில்லை என முடிவெடுக்கப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

