அனைத்து அரசுத் துறைகளில் உள்ள தகவல்களையும் ஆவணங்களையும் டிஜிட்டல் மயமாக்க ரூ. 1 லட்சம் கோடி மதிப்பில் செலவிடப்படுகிறது என்று தேசிய நூதன முயற்சிகள் கவுன்சில் தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்திருக்கிறார்.
புது தில்லியில் ஆய்வரங்கு ஒன்றில் பேசிய அவர் தெரிவித்தது: மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து தகவல்களையும் டிஜிட்டல் மயமாக்குவது மிகவும் அவசியம். அப்போதுதான் இந்தியாவின் ஒவ்வொரு பஞ்சாயத்து அளவிலும் அந்த தகவல்களை ஒருவர் சுலபமாகப் பெற இயலும். நான்கு பெரும் டிஜிட்டல் தகவல் மையங்களை அரசு அமைக்க இருக்கிறது. பத்தாயிரம் சாப்ட்வேர் தொழில்நுட்ப நிபுணர்கள் இந்தப் பணியில் இப்போது ஈடுபட்டுள்ளனர். இதற்கான நெட்வர்க், அப்ளிகேஷன், தொழில்நுட்ப கட்டமைப்பு ஆகியவற்றின் மதிப்பைக் கணக்கிட்டால், அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவிடுகிறது.
இந்தப் பணி பூர்த்தி அடையும்போது ஒவ்வொரு பஞ்சாயத்து அளவில் தகவல் பரிமாற்றம் எளிதாக மாறும். இப்போது அமைக்கப்பட்டு வரும் பெரும் தகவல் மையங்கள் தேசிய அளவில் செயல்படும். மாநில அளவில் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்துக்கென டிஜிட்டல் தகவல் மையம் செயல்படும்.
இப்போது நடைபெற்றுவரும் பணி நமது அரசு அமைப்புக்கே புதிய வடிவம் தரும். தகவல் பரிமாற்றத்தில் எல்லைகள் எதுவும் இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்க முயன்று வருகிறோம் என்று அவர் கூறினார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

