நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து இரண்டாம் மாதமாக பிப்ரவரியில் 4.25 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏற்றுமதியை அதிகரிக்க அரசு மேலும் பல வரிச் சலுகைகளை அறிவிக்க உள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதியில் கணிசமான முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது என்று வர்த்தகச் செயலர் எஸ்.ஆர். ராவ் தெரிவித்துள்ளார். பிப்ரவரியில் ஏற்றுமதி வருமானம் 2,626 கோடி டாலராகும். அரிசி, எண்ணெய், உணவுப் பொருள்கள், மருந்துப் பொருள்களின் ஏற்றுமதி மற்றும் ரசாயனப் பொருள்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இறக்குமதி 2.6 சதவீதம் அதிகரித்துள்ளது. இறக்குமதி 2.6 சதவீதம் அதிகரித்து 4,118 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை 1,492 கோடி டாலராகும். அரிசி ஏற்றுமதி 27.7 சதவீதம் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதி ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் 11.9 சதவீதம் அதிகரித்து 15,500 கோடி டாலராக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இறக்குமதி அளவு 13,900 கோடி டாலராக இருந்தது. இதேபோல தங்கம், வெள்ளி இறக்குமதி 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

