சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

"இரு சக்கர வாகன விற்பனையில் ஹோண்டா முதலிடம் பிடிக்கும்'

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் இரு சக்கர வாகன விற்பனையில் ஹோண்டா நிறுவனம் முதலிடம் பிடிக்கும் என்று

Updated On :12 மார்ச் 2013, 8:54 am

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் இரு சக்கர வாகன விற்பனையில் ஹோண்டா நிறுவனம் முதலிடம் பிடிக்கும் என்று அந்நிறுவனத்தில் செயல் பிரிவு தலைவர் சின்ஜி அயாமா தெரிவித்தார்.

ஜப்பான் நிறுவனமான ஹோண்டா, ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் என்ற பெயரில் நமது நாட்டில் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் ஹோண்டா "சிபி ட்ரிகர்' பைக் அறிமுக நிகழ்ச்சி குர்காவ்னில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற சின்ஜி அயாமா கூறியது: இந்தியாவில் இரு சக்கர வாகன விற்பனையில் ஹோண்டா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஹீரோ மோட்டோ கார்ப் முதலிடத்திலும், பஜாஜ் நிறுவனம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இப்போதைய சூழ்நிலையில் ஹீரோ நிறுவனம் எங்களுக்கு போட்டியாக இல்லை. பஜாஜ் நிறுவனம்தான் நெருங்கிய போட்டியாளராக உள்ளது. ஏனெனில் ஹீரோ நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு குறைந்து வருகிறது. எங்கள் நிறுவனத்தின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. இதே நிலைதான் எதிர்காலத்திலும் நீடிக்கும். எனவே 2015-16-ம் ஆண்டில் இந்தியாவில் இரு சக்கர வாகன விற்பனையில் நாங்கள்தான் முன்னிலையில் இருப்போம் என்றார்.