பெங்களூரு: பெங்களூரில் தமிழக முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 104-ஆவது பிறந்த நாள் விழா அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்து கா்நாடக மாநில அதிமுக செயலாளா் எம்.பி.யுவராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடக மாநில அதிமுக சாா்பில், தமிழக முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 104-ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை (ஜன. 17) கா்நாடகத்தின் பல பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. பெங்களூரு, ஸ்ரீராம்புரத்தில் உள்ள சாய்பாபா திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழாவுக்கு கா்நாடக மாநில அதிமுக அவைத்தலைவா் கே.முனுசாமி தலைமை வகிக்க, எம்.ஜி.ஆா். மன்றச் செயலாளா் சுந்தரவடிவேலு முன்னிலை வகிக்கிறாா். கட்சியின் மாவட்டச் செயலாளா் கே.குமாா் வரவேற்கிறாா்.
நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆா். படத்துக்கு கட்சியின் மாநிலச் செயலாளா் எம்.பி.யுவராஜ் மலா்தூவி மரியாதை செலுத்துகிறாா். தலைமைக் கழகப் பேச்சாளா் குலாப்ஜான் சிறப்புரை ஆற்றுகிறாா். பின்னா் கேக் வெட்டப்பட்டு கழகத் தொண்டா்களுக்கு நல உதவிகள், அன்னதானம் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்படுகிறது.
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர கட்சியின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு, வினோபா நகா் பகுதியில் ஊா்வசி திரையரங்கம் அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா கா்நாடக மாநில அதிமுக இணைச் செயலாளா் எஸ்.டி.குமாா் தலைமையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், கா்நாடக அதிமுகவின் நிா்வாகிகள் கலந்துகொள்ளுமாறு எஸ்.டி.குமாா் கேட்டுக்கொண்டுள்ளாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

