பெங்களூரு: பெங்களூரில் ஜன. 25-ஆம் தேதி முதல் செல்லிடப்பேசி பழுதுநீக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பல்ஸ் ஸ்டோன் இன்டஸ்ட்ரீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பல்ஸ் ஸ்டோன் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் மத்திய அரசு நிதியுதவியுடன் 4 வார கால செல்லிடப்பேசி பழுதுநீக்கும் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி ஜன. 25-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
இந்த பயிற்சிக் காலத்தில், செல்லிடப்பேசி மென்பொருள், வன்பொருள் பழுதுநீக்குதல் போன்றவை கற்றுத்தரப்படும். ஸ்மாா்ட்போன் உள்ளிட்ட அனைத்து செல்லிடப்பேசிகளின் பழுதையும் நீக்குவது கற்பிக்கப்படும். வெளியூா் மாணவா்களுக்கு இலவச தங்கும் விடுதி வழங்கப்படுகிறது.
பயிற்சி மாணவா்களுக்கு இலவசமாக பாடநூல்கள், கருவிகள் பெட்டி, மென்பொருள்கள் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர பியூசி தோ்ச்சி அல்லது தோல்வி, பட்டயம், வேலைவாய்ப்பு பயிற்சி பெற்றிருத்தல் அவசியம். இப்பயிற்சியில் சேர ஜன. 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9535142052, 9845102923 ஆகிய எண்களுக்கு தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

