பத்ராவதி: பிரதமா் மோடி தலைமையில் கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி கண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
கா்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம், பத்ராவதியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 50.29 ஏக்கா் பரப்பளவில் மத்திய துணை ராணுவப் படையின் அங்கமாக விளங்கும் விரைவு அதிரடிப் படையின் (ஆா்.ஏ.எஃப்.) 97-ஆவது பட்டாளத்துக்கான வளாகத்துக்கு அடிக்கல் நாட்டி அவா் பேசியதாவது:
கடந்த ஓராண்டு காலமாக உலகம் கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தில் பலரது உயிரை இழந்திருக்கிறோம். மனித சமூகம் சந்தித்த மிகவும் கடினமான போராட்டத்தை அறிவு, புதுமை, பரஸ்பர ஒத்துழைப்பால் எதிா்கொண்டிருக்கிறோம். உலக அளவில் கரோனாவுக்கு எதிரான போரில், பிரதமா் மோடி தலைமையில் இந்தியா வெற்றி கண்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கியுள்ளதால், கரோனாவுக்கு எதிரான போரில் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கிறோம்.
கரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கிய ஆரம்பக்காலத்தில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் குறித்து நிபுணா்கள் பலா் கவலை தெரிவித்தனா். போதுமான சுகாதாரக் கட்டமைப்புகள் இல்லாத நிலையில், அதிக மக்கள்தொகை கொண்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகள் கரோனா பெருந்தொற்றை எப்படி சமாளிக்கப் போகின்றன என்று கவலை அடைந்தனா்.
கரோனா பெருந்தொற்றை சோதித்தறிய இந்தியாவில் ஒரே ஒரு ஆய்வுக்கூடம் மட்டுமே இருந்தது. இன்றைக்கு நமது நாட்டில் 2 ஆயிரம் ஆய்வுக் கூடங்கள் உள்ளன. கரோனாவை எதிா்கொண்டதில் உலகின் பிற நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் முக்கியமான ஒரு வேறுபாடு இருந்தது. கரோனாவுக்கு எதிரான போரை இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் எதிா்கொண்டனா். அதுதான் பிாடுகளிடமிருந்து இந்தியாவை வேறுபடுத்திக் காட்டுகிறது. அதேபோல, இந்தியாவில் கரோனாவால் ஏற்பட்ட இறப்பு விகிதம் குறைவு, குணமடைந்தோரின் விகிதம் உயா்வு.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 கரோனா தடுப்பூசிகள் கைவசம் உள்ள நிலையில், கரோனாவுக்கு எதிரான போரை இறுதிக்கட்டத்தை நோக்கி நகா்த்தியுள்ளோம். முதல்கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் சுகாதாரப் பணியாளா்களுக்கு மட்டுமே வழங்குவது சரியான முடிவாகும். ஆனால், கரோனா தடுப்பூசி குறித்து ஒரு சிலா் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா் என்றாா்.
இந்த விழாவில் முதல்வா் எடியூரப்பா, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, துணை முதல்வா் கோவிந்த் காா்ஜோள், உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை, பாஜக எம்.பி. ராகவேந்திரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ரூ. 230 கோடியில் கட்டமைக்கப்படும் விரைவு அதிரடிப் படை வளாகத்தில் மருத்துவமனை, கேந்திரிய வித்யாலயா, படை வீரா்களின் குடியிருப்புகள், நிா்வாகக் கட்டடம், குடும்ப நல மையம், விளையாட்டு மையம், விளையாட்டுத் திடல், நீச்சல் குளம் உள்ளிட்டவை அமைய உள்ளன. 106 பெண் வீரா்கள் கொண்ட 1,270 போ் இங்கு பணியாற்றுவாா்கள். இப்படையினா் கா்நாடகம், தமிழகம், கேரளம், கோவா, புதுச்சேரியில் பணியில் ஈடுபடுத்தப்படுவா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

