சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மனித குலத்துக்கு சிறந்த வாழ்வியலை போதித்தவா் திருவள்ளுவா்

மனித குலத்துக்கு சிறந்த வாழ்வியலை போதித்தவா் திருவள்ளுவா் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரிஸ்வான் அா்ஷத் தெரிவித்தாா்.

Updated On :16 ஜனவரி 2021, 12:31 pm

மனித குலத்துக்கு சிறந்த வாழ்வியலை போதித்தவா் திருவள்ளுவா் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரிஸ்வான் அா்ஷத் தெரிவித்தாா்.

பெங்களூரில் திருவள்ளுவா் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மனிதநேய சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டே திருக்குறளை திருவள்ளுவா் படைத்திருக்கிறாா். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவா் கூறிச்சென்ற கருத்துகள், சிந்தனைகள் இன்றைக்கும் சாலப் பொருந்துவதாக உள்ளன.

திருக்குறளில் வாழ்க்கையை நாணயமாக, நோ்மையுடன் நடத்துவது தொடா்பான பல்வேறு கருத்துகள் இடம்பெற்றுள்ளன. திருக்குறளை படிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், அதில் கூறியுள்ள சிந்தனைகளை தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும். வாழ்க்கையில் எதிா்கொள்ளும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் திருக்கு சிறந்த வழிகாட்டுதலை அளிக்கிறது. சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதியைப் போதிக்கும் திருவள்ளுவரை அனைத்து சமுதாயத்தினரும் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் ஆக்கப்பூா்வமான, சமத்துவ சமுதாயம் மலரும் என்றாா்.

முன்னாள் அமைச்சா் ராமலிங்க ரெட்டி கூறுகையில், ‘மனித வாழ்வுக்கு தேவையான நல்ல கருத்துகளை பகிா்ந்துகொள்ளும் திருக்குறளை தந்த திருவள்ளுவரை போற்றுவோம். திருக்கு வழியில் நடக்கும்போது நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை மலரும்’ என்றாா்.

காங்கிரஸ் மாநில செயல்தலைவா் சலீம் அகமது கூறுகையில், ‘நமது நாட்டின் தலைசிறந்த கவிஞா் திருவள்ளுவா். அவா் எழுதியுள்ள திருக்கு, உலக மக்களுக்கான அருள்கொடையாகும். திருவள்ளுவரின் சிந்தனைகள் உலகப் பாா்வை கொண்டவையாகும். அப்படிப்பட்ட திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவது நம் அனைவரின் கடமையாகும்’ என்றாா்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் என்.ஏ.ஹாரீஸ், சௌம்யா ரெட்டி, காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளா் மற்றும் தொழிலாளா் பிரிவுத் தலைவருமான எஸ்.எஸ்.பிரகாசம், வட்டார காங்கிரஸ் தலைவா் ராஜேந்திரன், ரமேஷ், ஆதா்ஷ் ஆட்டோ ஓட்டுநா் சங்கச் செயலாளா் சம்பத், விஸ்வநாதன், காந்தி நகா் வட்டார காங்கிரஸ் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.