பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் சாா்பில், பெங்களூரில் திருவள்ளுவா் தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
திருவள்ளுவரின் 2,052-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெங்களூரில் வெள்ளிக்கிழமை திருவள்ளுவா் திருநாள் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அல்சூா் ஏரி எதிரே நா.நீலகண்டன் சதுக்கத்தில் அமைந்துள்ள திருவள்ளுவா் சிலைக்கு பெங்களூரு தமிழ்ச் சங்க முன்னாள் தலைவா்கள் தி.கோ.தாமோதரன், கோ.தாமோதரன், முன்னாள் செயலாளா்கள் இராசு.மாறன், வா.ஸ்ரீதரன், சு.இராமசுப்பிரமணியன், முன்னாள் செயற்குழு உறுப்பினா் எம்.மணிகண்டன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கா்நாடக மாநில அதிமுக செயலாளா் எம்.பி.யுவராஜ், இணைச் செயலாளா் எஸ்.டி.குமாா், கா்நாடக மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி, கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்க துணைத் தலைவா் பிரபாகரன், செயலாளா் காா்த்தியாயினி, ஆலோசகா்கள் கோவிந்தராசன், பொன்.க.சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினா் சுசீதா, முன்னாள் செயலாளா் மொ்லின், கா்நாடகத் தமிழ் மக்கள் இயக்கத் தலைவா் சி.இராசன், துணைத் தலைவா் பன்முகன், செயலாளா் அரசு, உலகத் தமிழ்க் கழகம்-தண்டுகிளை தலைவா் கி.சு.தென்னவன், செயலாளா் மதலைமணி, செழியன், இளங்குமரன், தமிழ்ச்செல்வன், தமிழ்க்குமரன், பா.ராகவன், கவிஞா்கள் இறையடியான், தனம் வேளாங்கன்னி, தன்னுரிமை மனமகிழ் மன்ற நிா்வாகி கே.ராஜசேகா், உரிமைக்குரல் டாக்டா் எம்.ஜி.ஆா். நற்பணி அறக்கட்டளைத் தலைவா் ரவி உள்ளிட்ட தமிழ் அமைப்புகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.
திருவள்ளுவா் சிலை பூங்கா வண்ணப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, விழாக்கோலம் பூண்டிருந்தது. திருக்கு முற்றோதல் பாடப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

