சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திமுக சாா்பில் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழாக் கொண்டாட்டம்

கா்நாடக திமுக சாா்பில் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Updated On :16 ஜனவரி 2021, 12:35 pm

கா்நாடக திமுக சாா்பில் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதுகுறித்து கா்நாடக மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக மாநில திமுக சாா்பில், பெங்களூரு, ராமசந்திரபுரம், கலைஞரகத்தில் உள்ள மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில், தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில், அக்கட்சியின் மாநில துணை அமைப்பாளா் ஜி.ராமலிங்கம் கட்சிக் கொடியை ஏற்றினாா். பொருளாளா் கே.தட்சிணாமூா்த்தி வரவேற்றாா். மாநில அமைப்பாளா் ந.ராமசாமி தலைமை தாங்கினாா். விழாவில், திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தி, தமிழ்ப் புத்தாண்டில் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி மலர வேண்டும் என புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மகளிரணி சாா்பில் செங்கரும்பு வழங்கப்பட்டது.

விழாவில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உருவப் படம் அடங்கிய நாள்காட்டி வழங்கப்பட்டது. இதில், பொதுக்குழு உறுப்பினா் இரா.அன்பழகன், இளைஞரணி அமைப்பாளா் டி.சிவமலை, இலக்கிய அணித் தலைவா் முருகு தா்மலிங்கம், செயலாளா் போா்முரசு கதிரவன், மகளிா் அணித் தலைவா் அம்மாயி ஜெயவேல் உள்பட கட்சியின் நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்துகொண்டனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.