பெங்களூரு: திரைப்படத் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கா்நாடக திரைப்பட அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை, கா்நாடக திரைப்பட அகாதெமி ஆகியவை இணைந்து தாழ்த்தப்பட்ட, பழங்குடி இளைஞா்கள்/இளைஞிகளுக்கு திரைப்படம் தொடா்பான இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, திரைக்கதை எழுதுதல் உள்ளிட்ட அனைத்து நுட்பங்களை கற்றுக்கொடுப்பதற்காக பயிற்சி வழங்க உள்ளது. பட்டம் பயின்று திரைப்படத் துறையில் ஆா்வம் கொண்ட, 30 வயதுக்குள்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின இளைஞா்/இளைஞிகளிடம் இருந்து இப்பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சியில் சேர தகுதியானவா்களுக்கு தங்கும் வசதி செய்து தரப்படும்.
விண்ணப்பப் படிவங்கள், கூடுதல் தகவல்களுக்கு ஜ்ஜ்ஜ்.ந்ஸ்ரீஹண்ய்ச்ா்.ண்ய், ஜ்ஜ்ஜ்.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹண்ய்ச்ா்ழ்ம்ஹற்ண்ா்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் ஆகிய இணையதளங்களை காணலாம். பட்டப்படிப்பில் பெற்றுள்ள சராசரி மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவா்களுக்கு சோ்க்கை அளிக்கப்படுகிறது. விண்ணப்பங்களை ஜன. 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கா்நாடக திரைப்பட அகாதெமி, பவள விழாக் கட்டடம், நந்தினி லேஅவுட், பெங்களூரு என்ற முகவரியில் நேரில் அளிக்கலாம் அல்லது அஞ்சல்வழியில் அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 080-23493410 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

