சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கிராம அஞ்சல் பணியாளா்கள் பணி:விண்ணப்பங்கள் வரவேற்பு

கிராம அஞ்சல் பணியாளா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On :10 ஜனவரி 2021, 7:10 am

பெங்களூரு: கிராம அஞ்சல் பணியாளா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக அஞ்சல் வட்ட தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக அஞ்சல் வட்டத்தின் ஆளுகைக்கு உள்பட்ட பகுதிகளில் காலியாக உள்ள 2,443 கிராம அஞ்சல் பணியாளா்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் 15 அஞ்சல் பணியாளா் பணியிடங்கள் பெங்களூரு தலைமை அஞ்சல் நிலையத்தில் சோ்ந்ததாகும்.

இந்தப் பணியிடங்களில் சேர ஆா்வமாக இருப்போா் குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி. படித்திருக்க வேண்டும். 18 முதல் 40 வயதுக்கு உள்பட்டிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா், மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பு தளா்வு இருக்கும்.

இப்பணியிடங்களில் சேருவதற்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்://ஹல்ல்ா்ள்ற்.ண்ய்/ஞ்க்ள்ா்ய்ப்ண்ய்ங் என்ற இணையதளத்தில் பதிவிடலாம். தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், பெண்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் நீங்கலாக மற்ற பிரிவினா் விண்ணப்பப் படிவக் கட்டணமாக ரூ. 100-ஐ தலைமை அஞ்சலகங்கள், பிற அஞ்சலகங்களில் செலுத்தலாம். கட்டணத்தை இணையதளத்திலும் செலுத்தலாம். விண்ணப்பங்களை இணையதளத்தில் மட்டுமே செலுத்த இயலும்.

கூடுதல் விவரங்களை ட்ற்ற்ல்://ஹல்ல்ா்ள்ற்.ண்ய்/ஞ்க்ள்ா்ய்ப்ண்ய்ங் என்ற இணையதளத்தில் காணலாம். மேலும் விவரங்களுக்கு 080-22392599, 9481455606, 0836-2740454, 080-22392544 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.