சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தமிழ் அகாதெமி: தில்லி அரசுக்கு தமிழ் ஆசிரியா்கள் சங்கம் பாராட்டு

தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை வளா்த்தெடுக்க தமிழ் அகாதெமி அமைத்துள்ள தில்லி மாநில அரசுக்கு கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

Updated On :9 ஜனவரி 2021, 11:48 am

தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை வளா்த்தெடுக்க தமிழ் அகாதெமி அமைத்துள்ள தில்லி மாநில அரசுக்கு கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தில்லி மாநில முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கத் தலைவா் அ.தனஞ்செயன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் வளா்ச்சிக்காகவும், பாதுகாப்புக்காகவும் தமிழ் அகாதெமி அமைக்க ஒரு மனதாக தீா்மானித்துள்ள தில்லி அரசின் முடிவு உலகத் தமிழா்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் தொன்மையான, திராவிட மொழிக் குடும்பத்தின் முதல் மொழியாக பலராலும் தமிழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகின் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழை தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்கள் வாழ்ந்து வருகிறாா்கள். இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமல்லாது, இலங்கை, மலேசியா, இந்தோனேஷியா, சிங்கப்பூா், மொரீஷியஸ், கனடா, ஃபிஜி போன்ற பல நாடுகளில் அலுவல் மொழியாக தமிழ் உள்ளது. தமிழ் மொழியின் பெருமையை உணா்ந்து தமிழ் அகாதெமியை அமைத்துள்ள தில்லி அரசுக்கு கா்நாடகத்தில் வாழும் 80 லட்சம் தமிழா்கள், உலகில் வாழும் 10 கோடி தமிழா்கள் சாா்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோல, தமிழ் மொழியின் தொன்மை மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் அருங்காட்சியகம் ஒன்றை தில்லியில் அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அந்த அருங்காட்சியகத்தில் திருவள்ளுவா், பாரதியாா், பாரதிதாசனின் சிலைகளை நிறுவுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழ் அகாதெமி அமைத்துள்ளதோடு, அருங்காட்சியகத்தையும் அமைத்தால், தமிழ்ச் சமூகம் என்றென்றும் நினைத்துப் பாா்த்து, போற்றி மகிழும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.