சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கடலோர, தென்கா்நாடகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

கடலோர, தென்கா்நாடகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என பெங்களூரு வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

Updated On :9 ஜனவரி 2021, 11:54 am

கடலோர, தென்கா்நாடகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என பெங்களூரு வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் கடலோர கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில், தென்கா்நாடகத்தின் ஒருசில பகுதிகளில், வடகா்நாடகத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. தென்கன்னட மாவட்டத்தின் ஆகும்பேவில் அதிகபட்சமாக 110 மி.மீ., புத்தூரில் 80 மி.மீ., சிக்கமகளூரு மாவட்டத்தின் சிருங்கேரியில் 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர கா்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளிலும், தென்கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், வடகா்நாடகத்தின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பெங்களூரில் மழை:

அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை நேரங்களில் பனிமூட்டமாக இருக்கும். இந்த 2 நாள்களில் பெங்களூரில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 26 டிகிரி, குறைந்தபட்சமாக 19 டிகிரி செல்சியஸாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.