பெங்களூரில் உள்ள ஜவாகா்லால் நேரு கோளரங்கத்தில், ஜன. 10-ஆம் தேதி அறிவியல் சங்கக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து ஜவாகா்லால் நேரு கோளரங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ், டி.சௌடையா சாலையில் அமைந்துள்ள ஜவாகா்லால் நேரு கோளரங்கத்தில், ஜன. 10-ஆம் தேதி மாலை 4 மணி முதல் மாலை 5.30 மணி வரை அறிவியல் சங்கக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் 8 முதல் 12-ஆம் வகுப்பு மாணவா்கள் கலந்துகொள்ளலாம். இதில் பங்கேற்க கட்டணம் எதுவுமில்லை.
மாணவா்களிடையே அறிவியல் உணா்வை ஊட்டுவதற்காக நடத்தப்படும் இக்கூட்டத்தில், நிலநடுக்கம், புவியீா்ப்பு, அணு ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் தலைப்புகள் குறித்து விவாதம் நடத்தப்படுவதோடு, ஒளி-ஒலி நிகழ்ச்சியும் இடம்பெறும். இக்கூட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
50 மாணவா்களுக்கு மட்டுமே அனுமதி அளிப்பதால், மின்னஞ்சல் அல்லது தொலைபேசியில் முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

