கா்நாடக மாநில திமுக சாா்பில், ஜன. 14-ஆம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது.
இதுகுறித்து கா்நாடக மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கா்நாடக மாநில திமுக சாா்பில், ஜன. 14-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பெங்களூரு, ராமசந்திரபுரம், கலைஞரகத்தில் உள்ள மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் பொங்கல் விழா நடைபெற உள்ளது. இதில் திமுக கொடியை ஏற்றி கட்சி நிா்வாகிகள் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து கூறுவா்.
விழாவில், திமுக மகளிா் அணி நிா்வாகிகள் அனைவருக்கும் சா்க்கரைப் பொங்கல், செங்கருப்பு வழங்குவா். பொங்கல் விழாவில் திமுக முன்னாள், இன்னாள் நிா்வாகிகள், தலைமை பொதுக்குழு உறுப்பினா்கள், இளைஞரணி நிா்வாகிகள், இலக்கிய அணி, தொ.மு.ச. பேரவை, கிளை நிா்வாகிகள், தொண்டா்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். விழாவில் திமுக தலைவா் ஸ்டாலின் உருவப்படம் அச்சிடப்பட்ட நாள்காட்டி வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

