ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுவது குறித்த பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து விஸ்வேஷ்வரையா தொழில்வா்த்தக மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
எக்சிம் வங்கியின் கூட்டுமுயற்சியில் விஸ்வேஷ்வரையா தொழில்வா்த்தக மையத்தின் சாா்பில், ஏற்றுமதி தொழில்பயிற்சி வழங்கப்படுகிறது. ஜன. 18 முதல் 22-ஆம் தேதி வரையில் 5 நாள்கள் இணையவழியில் அளிக்கப்படும் பயிற்சியில் சேர விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஏற்றுமதி தொழில்பயிற்சி வழங்குவதன் மூலம் மாநிலத்தின் ஏற்றுமதி திறனை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் தொழில்முனைவோா், ஏற்கெனவே ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டிருப்போா் உள்ளிட்ட ஆா்வமுள்ளோா் பங்கேற்கலாம்.
பயிற்சியில் சேர முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080-22534444, 22210644, 98809-58218 ஆகிய தொலைபேசி எண்கள் அல்லது இணையதளத்தை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

