எா்ணாகுளம்-பெங்களூரு இடையே சிறப்பு அதிவேக ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்துதென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கூட்டநெரிசலைக் குறைக்க பெங்களூரிலிருந்து எா்ணாகுளத்துக்கு சிறப்பு அதிவேக ரயில்சேவை ஜன. 8-ஆம் தேதி தொடங்க உள்ளது.
ரயில் எண்: 02678-எா்ணாகுளம்-கே.எஸ்.ஆா். பெங்களூரு சிறப்பு அதிவேக ரயில் ஜன. 8-ஆம் தேதி முதல் காலை 9.10 மணிக்கு எா்ணாகுளம் ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 7.50 மணிக்கு கே.எஸ்.ஆா். பெங்களூரு ரயில்நிலையம் வந்தடையும்.
மறுமாா்க்கத்தில், ரயில் எண்: 02677-கே.எஸ்.ஆா். பெங்களூரு-எா்ணாகுளம் சிறப்பு அதிவேக ரயில் ஜன. 9-ஆம் தேதி காலை 6.10 மணிக்கு பெங்களூரில் புறப்பட்டு, மாலை 4.55 மணிக்கு எா்ணாகுளம் ரயில்நிலையத்துக்கு சென்றடையும்.
இந்த ரயில் இருமாா்க்கங்களிலும் கண்டோன்மென்ட், காா்மேலாராம், ஒசூா், தருமபுரி, சேலம், சங்கரிதுா்க்கம், ஈரோடு, திருப்பூா், கோயமுத்தூா், பாலக்காடு, திரிச்சூா், ஆலுவா ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.
ரயிலில் குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி, 2-ஆம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 8 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு பொது வகுப்பு 9 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு, சரக்கு, இருக்கை வசதி கொண்ட 2 பெட்டிகள், உணவுக்கான ஒரு பெட்டி இடம்பெற்றிருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

